திண்டுக்கல் ஜனவரி 26

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட திருவருட் பேரவை சார்ந்த தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு திருவருட்பெருமை தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். பொருளாளர் நாட்டாண்மை காஜா மைதீன் துணைத் தலைவர்கள் ஜி.சுந்தர்ராஜன், சண்முகம், முகமது யூசுப் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் எம் எல் ஏ, மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மதுரை சேசு சபை தலைவர் தாம்சன் அமிர்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூக பேச்சாளர் மதன முனியப்பன் சமத்துவ பொங்கல் விழா பற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவருட் பேரவை இணைச் செயலாளர் திபூர்ஷியஸ் சிறப்பாக செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here