திண்டுக்கல் காஸ்மாஸ் லைன்ஸ் சங்கம் சார்பில் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…

திண்டுக்கல் காஸ்மாஸ் லையன்ஸ் சங்கம் சார்பில் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி திண்டுக்கல் முகமதியாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜி. சோபியா தெரஸ் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு காஸ்மாஸ் லையன்ஸ் சங்கத்தின் முதல் உதவி தலைவர் எஸ். விஜயகுமார் செயலாளர்,ஆர். பாபிமாலா, ஜே. செல்வராணி, பொருளாளர் எஸ்.சேவியர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் கருப்பட்டி காபி நிலைய உரிமையாளர்கள் எம் கிருஷ்ணகுமார்,கே.முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு 100 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்கள்.

மேலும் கருப்பட்டி நிலைய வாடிக்கையாளர்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணன், ஜமுனா ராணி,தனபாலன் ஆகிய மூன்று நபர்களுக்கு 32 இன்ச் கலர் டிவி இலவசமாக வழங்கினார்கள். இந்நிகழ்வில் வட்டாரத் தலைவர் ஜே.அமலா தேவி காஸ்மஸ் சங்க உறுப்பினர்கள் என் தனுஷ்கோடி,எஸ்.செபாஸ்டின் குணசேகர்,டாக்டர்.குணவதி,செபா மாஸ்டர்,அஜய், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஜெகதீஸ்வரி, செல்வமணி, காந்திகிராமம் சாவித்திரி பாபு, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்ன காலை ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் காசுமார்க் லயன்ஸ் சங்க புரவலர் எம்.திபூர்சியஸ் சிறப்பாக செய்திருந்தார் .

ஸ்ரீ காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 75-வது குடியரசு தின விழா…

ஸ்ரீ காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா பள்ளி செயலாளர். இராமலிங்கம் தலைமையில்,இயக்குனர் நரசிங்க சக்தி முன்னிலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை தேசிய கொடியை ஏற்றினார்.

இவ்விழாவில் பள்ளி முதல்வர் என். கே.லதா, எ. ஒ.அகிலன், பெற்றோர்கள், ஆசிரியர்கள்மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் ஹரிணி தேவி (ஏழாம் வகுப்பு ),தன்ய ஸ்ரீ (ஐந்தாம் வகுப்பு) குடியரசு தின சிறப்பு பற்றி பேசினார்கள்.

இவ்விழாவில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவ்விழாவினை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here