புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “ஸ்டார்ட் அப் மூலம் நிலையான வளர்ச்சியில் இளைய தலைமுறையினரின் பங்கு, டிஜிட்டல் யுகத்தில் புதுமைகள்”B. com, B. ComCA மற்றும் BBA துறை சார்பாக ( 27.01.2024 ) அன்று சர்வதேச மாநாட்டை நடத்தினார்கள்.

மாநாட்டை கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்களும் கல்லூரியின் முதல்வர் அருட் சகோதரி முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்களும் தொடங்கி வைத்தனர். சர்வதேச கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக டாக்டர். கமலாதேவி பாஸ்கரன், எம் பி ஏ, அமிட்டி யுனிவர்சிட்டி துபாய், யு. ஏ. இ. கலந்து கொண்டு மாணவிகளுக்கு சுய வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழிகளையும் பகிர்ந்து கொண்டார்.

கருத்தரங்கிற்கு புனித அந்தோணியார் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் N. Shanthi அவர்கள், வரவேற்புரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் அருட் சகோதரி முனைவர் டாக்டர். மேரி பிரமிளா சாந்தி சிறப்புரை வழங்கினார்.

கல்லூரியின் இயக்குனர் டாக்டர்.மேரி ஜோசபின் இசபேல்லா அவர்கள் தலைமை உரை வழங்கினார். கருத்தரங்கில் சுமார் 250 மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெவ்வேறு கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கட்டுரைகளை அனைவரின் முன்னிலையில் விளக்காட்சி மூலம் எடுத்துறைத்தார்கள்.

சிறந்த தொகுப்பாளிக்கான விருதை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் எம். பி. ஏ மாணவி சௌந்தர்யா பெற்றார்.இறுதியாகஇளங்கலை வணிக துறையை சேர்ந்த திருமதி. ஆஷா அந்தோணிஅவர்கள் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here