திண்டுக்கல் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய மற்றும் மாநில கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பொன்னாண்டவர் தலைமை வகித்தார்.

கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத் தலைவர் மணிவேல், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராம் மற்றும் சட்டமேதை அம்பேத்கர் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல உரிமைச் சங்க மாவட்ட செயலாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி செயலாளர் சாந்தி வரவேற்புரை வழங்கினார்.

பெண்களுக்கு இரட்டைச் சுமை பணியாள் ஓய்வூதிய வயது வரம்பை ஐம்பதாக குறைக்க வேண்டியும், நல வாரியத்தில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்கிட வேண்டியும், ஆன்லைன் மூலமாக பதிவிடும் முறையை கைவிட்டு அலுவலகம் மூலமாக நேரடியாக விண்ணப்பங்கள் பெற வேண்டி என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரன் நன்றியுரை வழங்கினார். மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் மற்றும் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here