புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவுசார் சொத்து உரிமைகள் மையம் புதிதாக தொடங்கப்பட்டது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் மேரி பிரமிளா சாந்தி முன்னிலை வகித்தார் . சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மையத்தினை தொடங்கி வைத்தார்.
கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவிகளும் அடிப்படை சட்டங்கள் பற்றியும் அறிவுசார் சொத்து உரிமைகள் குறித்த சட்ட தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சொத்துரிமை குறித்த சட்டங்களின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு மாணவிகளும் பெற்று பயன் அடைய வேண்டும் என்றும் மாணவிகளிடம் சிறப்புரையாக வழங்கினார்.
நிகழ்வினை அருட் சகோதரி நிலா ஒருங்கிணைப்பு செய்ததுடன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். நிகழ்வின் முடிவில் கல்லூரி துணை முதல்வர் ரோகிணி நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 1200 மாணவிகள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பு செய்தனர்.
அறிவுசார் சொத்துரிமை மையத்தின் புதிய பொறுப்பாளராக கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் அருட்சகோதரி ஆக்னேஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.