திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திண்டுக்கல் மாவட்ட இ சேவை மைய உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் மனோ பாலா வரும் காட்சியில் இ சேவை மையத்தினர் 300 ரூபாய் கொடுத்தால் மட்டுமே சேவை செய்ய முடியும் என தவறுதலாக சித்தரித்து எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும்.
அப்படி எடுக்கப்பட்ட காட்சிகளினால் தமிழகத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ சேவை மைய உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகப்பட்டு வருகிறது. எனவே இதைத் தொடர்ந்து துறையின் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாத பட்சத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியரிடம் இ சேவை உரிமையாளர் நல சங்கம் சார்பாக இந்தியன் திரைப்பட இயக்குனர் சங்கர் மீது புகார் மனு அளிக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக திண்டுக்கல் மாவட்ட இ சேவை மையம் உரிமையாளர்கள் நலச் சங்கத் ஆலோசனைக் கூட்டத்தில். மாவட்ட தலைவர் தனராஜ் பேட்டி