திண்டுக்கல்லில் துளிர் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. துளிர் அறக்கட்டளை ஜீவானந்தம் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். ஸ்ரீ வாணி ஆர்ட்ஸ் நிறுவனர் வரவேற்பு உரையாற்றினார். தேசிய ஹாக்கி விளையாட்டு மனிதநேய ஞானகுரு தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக இரட்டை வழக்கறிஞர் விவேக், ஊராட்சி ஒன்றிய தலைவர், ரோலர் ஸ்கேட்டிங் சங்க மாவட்ட செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இரட்டை வழக்கறிஞர் விவேக் அவர்கள் பேசியதாவது : “ஒரு சமுதாயம் நல்லா இருக்க வேண்டும் என்றால் நல்ல விஷயத்திற்கான போராட்டம் முன் எடுக்க வேண்டும், அப்படி போராட மன தைரியம் வேண்டும், மன தைரியம் வேண்டுமென்றால் உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும், உடல் ஆரோக்கியத்திற்கு கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் ” என்று வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உரையாற்றினார். விழாவில் பல்வேறு விளையாட்டுகளைச் சார்ந்த சுமார் 35 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
\