தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், திண்டுக்கல் வட்டக்கிளை ராக்ஸ்& கே ஆர் எஸ் நியூ லைஃப் மருத்துவமனை, மதுரை இணைத்து நடத்தும் ஓய்வூதியர்கள் மற்றும் பொது மக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் ஆனது திண்டுக்கல் வருவாய்த்துறை அலுவலர் சங்கம், பிச்சாண்டி பில்டிங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்க வட்டக்கிளை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். வட்டக்கிளை செயலாளர் ஜான்சன் முகாமை துவங்கி வைத்தார். மருத்துவமனை பொது மேலாளர் அருண் இந்த முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தார். சக்தி, ரத்தினமேரி,செல்வநாயகம், பொன்ராஜ்,பெரியசாமி, முத்துவேல், மோகன் மற்றும் மரிய சேவியர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் நுரையீரல் திறன் பரிசோதனை, இசிஜி, செவித்திறன் பரிசோதனை, சர்க்கரை மற்றும் பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த பொது மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர்.