திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக துப்பறியும் மோப்ப நாய் லீமாவிற்கு பணி நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் தலைமை தாங்கினார். ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் ஜோசப் நிக்ஸன், ஆய்வாளர் காளீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயசேகர்(DCRB)ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் எட்டு வருடமாக துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் பணியாற்றி வந்த லீமா என்ற துப்பறியும் நாயின் பணி நிறைவு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் தெரிவித்ததாவது: முதல்முறையாக லீமா என்ற நாய்க்கு பணி நிறைவு விழா நடைபெறுகிறது. லீமா என்ற நாய் எட்டு வருடமாக துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவில் சிறப்பாக பணியாற்றி பணி நிறைவு பெற்றது. இந்த துப்பறியும் மோப்ப நாய் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி உள்ளது.
பணி நிறைவுக்குப் பிறகு லீமா என்ற நாயை துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவிலேயே வைத்து பாதுகாக்கப்படும். மேலும் லீமா என்ற நாய் பணி ஓய்வு பெற்றதினால் புதியதொரு துப்பறியும் மோப்ப நாயை தேர்வு செய்து, முறையான பயிற்சி அளித்தபின் பணியில் அமர்த்தப்படும் என தெரிவித்தார்.