புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் மற்றும் பேராசிரியர் உறவு மேம்பாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாவட்டம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் மற்றும் தமிழக தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் திரு. குழந்தை ராஜ்அவர்கள் விருந்தினராக கலந்து கொண்டதுடன் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பெண் குழந்தைகளை அறிவுத்திறன் மிக்கவர்களாக, கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்து பல சாதனைகளை நிகழ்த்துபவர்களாக உருவாக்க ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர்களின் லட்சியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றி பெற வழிகாட்டியாக திகழ வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை சிறப்பு செய்தியாக வழங்கினார். இவ்விழாவில் அனைத்து பெற்றோர்களும், மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் .
விழாவினை கல்லூரியின் துணை முதல்வர்கள் அருட் சகோதரி டாக்டர். வனிதா ஜெயராணி அவர்கள் மற்றும் திருமதி. ரோகிணி அவர்கள் ஒருங்கிணைத்தனர். நிகழ்வில் தமிழ்த்துறை பேராசிரியர் திருமதி. சுபாலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் கல்லூரியின் கால சுவடுகள் காணொளியாக பெற்றோர்களுக்கு நிகழ்வில் சுமார் 600 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வேதியியல் துறை பேராசிரியர் திருமதி. சுகன்யா விண்ணரசி நன்றி உரை வழங்கினார்.