மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் கலந்து கொள்ள பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கல்வித் தகுதிகள் 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்திருக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் https://www.tnprivatejops. tn. gov. in இணையதளத்தில் உருவாக்கிக்கொள்ள தங்களது கைபேசிக்கு வரும் OTP- ஐ பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மீண்டும் User Id, password -ஐ பயன்படுத்தி உச்சென்று தங்களுடைய கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் உங்களது சான்றிதழ்களை நேரில் எடுத்து சென்றும் பதிவு செய்யலாம்.