புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் புதிதாக வருகை புரிந்ததை முன்னிட்டு அவர்களுக்கு வரவேற்பு விழாவானது நடைபெற்றது.
விழாவினை கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்களும் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்களும் தலைமை ஏற்று தொடங்கி வைத்தனர்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக விருட்சம் அகாடமி முதன்மை அலுவலர் திரு. ஜெயசீலன் அவர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு மாணவிகளும் தங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் பல துறைகளில் சாதனை மாணவிகளாக வலம் வர வேண்டும் என்று மாணவிகளை வாழ்த்தி உரையாற்றினார். நிகழ்வினை இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர். சிவரஞ்சனி அவர்கள் ஒருங்கிணைத்தார்.