திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் உள்ள செயின்ட் ஆன்டனி கல்லூரி மாணவிகளுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி 24/7/2024 முதல் 25 /07/ 2024 வரை நடைபெற்றது.
இதில் மாதவிடாய் சுழற்சி, ரத்த சோகையின் அறிகுறிகள், ரத்த சோகைக்கும் மாதவிடாய் சுழற்சிக்கும் இடையேயான தொடர்பு, ஊட்டச்சத்தான உணவுகள் மற்றும் தனிநபர் சுகாதார பழக்கவழக்கங்கள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை , மாதவிடாய் கோப்பை பயன்படுத்தும் முறை சுகாதார மறுசுழற்சி பட்டைகள் பயன்படுத்துவது குறித்து பயிற்சியில் மாணவிகளுக்கு மாவட்ட வள பயிற்றுநர் திருமிகு. அ. நிலா பாரதி பயிற்சி வழங்கினார்கள் மற்றும் பயிற்சியில் அனைத்து மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் திருமிகு. பிரமிளா, ஒருங்கிணைப்பாளர் திருமிகு. ரோஹிணி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தென்னம்பட்டி சமுதாய வள பயிற்றுநர் திருமிகு . சங்கீதா கலந்து கொண்டு பயிற்சியை சிறப்பித்தனர்.