இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மையமும் அரசு கருவி பொறியியல் பயிலகம் இணைந்து ஆயுஷ் மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் அரசு கருவி பொறியியல் பைலக வளாகத்தில் 30/07/24 கருத்தரங்கத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் Dr .சு.ஜெயச்சந்திரன் , பேசுகையில் ஆயுஷ் மருத்துவ முறையில் சிறப்பம்சங்கள் மற்றும் மருந்து பாதுகாப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார் மற்றும் மாணவர்களின் நலனுக்கான மூலிகை மருந்துகள் ஆடவர்களின் பல்வேறு நோய்கள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து விரிவாக விளக்கினார் .
மாவட்ட மையத்தின் இளநிலை ஆராய்ச்சியாளர் Dr.ரா பாலமுருகன் பேசுகையில் தரமான ஆயுஷ் மருந்துகள், பதிவு பெற்ற அனுபவம் மிக்க ஆயுஷ் மருத்துவர்களிடம் பாதுகாப்பான சிகிச்சை மேற்கொள்வது ,போலி மருந்து விளம்பரங்களை கண்டறிந்து விழிப்புடன் இருத்தல் பற்றி விளக்கம் அளித்தார்.
கல்லூரி முதல்வர் திரு . வரத கணேஷ் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.