முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2024, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருப்பாளரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 27 விளையாட்டுகள், 53 வகைகளில் மாவட்ட, மண்டலம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12 முதல் 19 வயது வரையிலும், கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு 17 முதல் 25 வரையிலும், மாற்றுத்திறனாளிகள் வயது வரம்பின்றி அனைத்து வயது பிரிவினருக்கும், பொது பிரிவினர் 15 முதல் 35 வயது வரையிலும்,அரசு ஊழியர்கள் அந்தந்த மாவட்டத்தில் பணிபுரிபவர்கள் கலந்து கொள்ளலாம்.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் CM Trophy 2024 – Online Registration – Player Login – இல் 25.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும். இணையதளம் வாயிலாக பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள இயலும்.
நேரடியாக போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. போட்டிகள் குறித்த விபரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்புரோடு, திண்டுக்கல்” என்ற முகவரியில் நேரிலோ அல்லது 74017 03504 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மொ. நா.பூங்கொடி, இ.ஆ.பா., அவர்கள் தெரிவித்துள்ளார்.