திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப் இ.கா. ப. அவர்கள் மாவட்டத்தில் உள்ள 36 காவல் நிலையத்தில் பணிபுரியும் வரவேற்பாளர்களுக்கு (Receptionist) கையடக்க மடிக்கணினிகளை (Tablet) 16.08.2024- ம் தேதி வழங்கினார்கள்.
இதன் மூலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள வரவேற்பாளர்களை அணுகி சிரமமின்றி தங்கள் புகார்களை பதிவு செய்து புகார் கொடுத்ததற்கு ஏற்பளிப்பு ரசீது வழங்கப்பட்டு பொதுமக்களின் புகார்களின் தன்மைக்கேட்ப நேரடியாக காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளான காவல் நிலைய ஆய்வாளர் அல்லது சார்பாய்வாளர் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு புகார் தாரரின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பொது மக்களின் புகார்களுக்கு விரைவில் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.