திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் சங்க இன்ட்ராக்ட் பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் பிரத்தியோக ஆளுமை வளர்ச்சி பயிலரங்கமானது திண்டுக்கல் ரோட்டரி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வாகை தலைவர் விக்னேஷ் மற்றும் திபேஷ் கே பட்டேல் ஏற்பாடு செய்திருந்தனர்.
இளைஞர் சேவை இயக்குனர்கள் வஞ்சி பட்டேல் மற்றும் பரமசிவம் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களை தேர்வு செய்து அவர்கள் பயன்பெறும் வரையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேற்கு ரோட்டரி சங்க தலைவர் புருஷோத்தமன் மற்றும் துணை ஆளுநர் செல்வகனி ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். சிறப்பாக இன்டர் கிளப் சங்கத் தலைவர்கள் 15 பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப் பட்டு, பதவியேற்கும் விழா நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சியாளர்கள் விவேகானந்தன், ஜெயசீலன், டீன் வெஸ்லி மற்றும் மதன முனியப்பன் ஆகியோர் மேடைப் பேச்சுக்கலை ஒரு அறிமுகம், மேடைப்பேச்சு கதை சொல்லுதல், போதையில்லா எதிர்காலம் மற்றும் சமூக வலைதள பாதிப்புகள் மற்றும் நவீன சமூக வாழும் கலை என்ற தலைப்பில் உரையாற்றினர்.