திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின விழாவானது கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் முன்னாள் ஆசிரியருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறப்பு விழாவாகிய ஆசிரியர் தின விழா மற்றும் தமிழக அரசின் குழந்தைகள் கலை திருவிழா நிகழ்வானது நடைபெற்றது.
தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா பவுண்டேஷன் செயலாளர் இரா.ஜெ. திவ்யா, சமூக ஆர்வலர் ராஜேந்திரன், இரட்டை வழக்கறிஞர்கள் விவேக், விழா ஒருங்கிணைப்பாளர் தனுஷ்கோடி ஆகியோர் வருகை தந்து இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.
இரட்டை வழக்கறிஞர்களான விவேக் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ஆசிரியர்களின் 25 ஆண்டுகளாக கல்வி சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்து கல்வி செம்மல் விருது வழங்கி கௌரவித்தார்கள்.
மேலும் குழந்தைகள் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு நடனம், வாழ்த்து, பாடல், கவிதை வாசித்தார்கள். கலைத்திருவிழா நிகழ்வாக மாறுவேடம், பேச்சு, பாடல், கதை கூறுதல், நடனம் அனைத்தும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நிகழ்வுற்றது. முதல் மூன்று இடங்களை பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்களுடன் இணைந்து ஜெயராணி தலைமை ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு பிரசன் மீடியா ஒருங்கிணைப்பாளர் தனுஷ்கோடி பள்ளியுடன் இணைந்து மாணவர் மற்றும் ஆசிரியரை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள் . இறுதியாக நாட்டுப்பண் பாடப்பட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.