தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் தலைவர் தி வேல்முருகன் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான மண்டபத்தில் அன்னதானம் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி இ. ஆ.ப, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.
இந்த ஆய்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள், கோரிக்கை மனுக்கள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருகோயில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள், கோரிக்கை மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருக்கோயில் அன்னதான மண்டபத்தில் சமையலறை, அன்னதானம் தயாரிப்பு பணிகள், அன்னதானம் நடைபெறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களுக்கான வசதிகள், அன்னதானம் தரம் குறித்து பக்தர்களிடம் கேட்டறியப்பட்டது.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் உள்ள சிகிச்சை வசதிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் கேட்டறியப்பட்டது.
ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிட்டங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ரெட்டியார்சத்திரத்தில் இந்தியா-இஸ்ரேல் கூட்டு தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மகத்துவ மையத்தில் காய்கறிகள், நாற்றுகள் உற்பத்தி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுஎன தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மாநில வழக்கறிஞர் அணி துணைத்தலைவர்
P. விவேக் குமார்.
செய்தி வழங்கியவர்.