Events AND Promo

ஹலோ நியூஸ் சேனலில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து செய்தி சேகரிப்பாளர்களாக இணைந்த திரு. கோபி, மற்றும் திரு. பிரகாஷ், அவர்களை வாழ்த்துகிறோம்.

திரு .பிரகாஷ்

(செய்தி சேகரிப்பாளர்கள் )

திண்டுக்கல்

திரு .கோபி

(செய்தி சேகரிப்பாளர்கள் )

திண்டுக்கல்

நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்துத் தரும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர், நிருபர் அல்லது பத்திரிக்கையாளர் (journalist) எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள்.

தேர்ந்த செய்தியாளர்களாவதற்கு உலகில் பல்வேறு நாடுகளிலும் பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் உள்ளன.

OUR NEWS CHANNEL CONTACT:–

9360996435

9025959647

செய்தியாளருக்கான பண்புகள்

செய்தியாளர் சிறந்த செய்தியாளராகத் திகழ வேண்டுமானால் அவரிடம் கீழ்காணும் தகுதிகள்/பண்புகள் இருக்க வேண்டும்.

  1. செய்தி மோப்பத் திறன்
  2. நல்ல கல்வியறிவு
  3. சரியாகத் தருதல்
  4. விரைந்து செயல்படல்
  5. நடுநிலை நோக்கு
  6. செய்தி திரட்டும் திறன்
  7. பொறுமையும் முயற்சியும்
  8. சொந்த முறை
  9. நல்ல தொடர்புகள்
  10. நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்
  11. நேர்மை
  12. கையூட்டுப் பெறாமை
  13. செயல் திறன்
  14. ஏற்கும் ஆற்றல்
  15. தன்னம்பிக்கை
  16. இனிய ஆளுமை
  17. தெளிவாகக் கூறும் ஆற்றல்
  18. மரபுகளைப் பற்றிய அறிவு
  19. சட்டத் தெளிவு