” சிறந்த செய்தி சேகரிப்பாளர்களை உருவாக்குவது, சட்ட விழிப்புணர்வு தருவது, மக்களுக்கு தேவையான செய்திகளை கொண்டு சேர்ப்பது, மாவட்டம் தொகுதி ஊராட்சி பகுதிகளில் உள்ள திறமையாளர்களை தமிழ் மக்களுக்கு அவர்களது திறமையை வெளிப்படுத்துவது, சட்டம் மருத்துவம் தொழில்நுட்பம் கல்வி சாதனையாளர்கள் விவசாயம் ஆன்மீகம் தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு விளையாட்டு மற்றும் பல செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது. “

ஊடகச் சுதந்திரம்
ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரம் ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.
செய்தியாளருக்கான பண்புகள்:–
செய்தியாளர் சிறந்த செய்தியாளராகத் திகழ வேண்டுமானால் அவரிடம் கீழ்காணும் தகுதிகள்/பண்புகள் இருக்க வேண்டும்.
- செய்தி மோப்பத் திறன்
- நல்ல கல்வியறிவு
- சரியாகத் தருதல்
- விரைந்து செயல்படல்
- நடுநிலை நோக்கு
- செய்தி திரட்டும் திறன்
- பொறுமையும் முயற்சியும்
- சொந்த முறை
- நல்ல தொடர்புகள்
- நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்
- நேர்மை
- கையூட்டுப் பெறாமை
- செயல் திறன்
- ஏற்கும் ஆற்றல்
- தன்னம்பிக்கை
- இனிய ஆளுமை
- தெளிவாகக் கூறும் ஆற்றல்
- மரபுகளைப் பற்றிய அறிவு
- சட்டத் தெளிவு